மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும் “மக்களிடையே சமநிலைக் கொள்கையைப் பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத் தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர் கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும் அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக் கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம். இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை…