என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!-தொடர் ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 4. திருக்கோவையார் உரைநயம் மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “தித்திக்கும் திருவாசகத்தேன்” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர்.கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப் பேராசிரியர் வகுத்திருக்கும் உரையாகும். அவர்…