உவகைதரும் உரையாசிரியர்களின் நடை – தெ.பொ.மீ.
உவகைதரும் உரையாசிரியர்களின் நடை இறையனார் அகப்பொருள் உரை ஒரு சிறந்த உரைநடைநூல். சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதோடு சோலை முதலியவற்றைப் பற்றிய புனைந்துரையும் அன்பு முதலியவை பற்றிய தத்துவ விளக்கமும் அங்கு உண்டு. ஆனால், அங்குப் பாட்டு நடை காதில் கேட்காமல் இல்லை. எதுகை மோனைகள் அளவுக்கு மீறி இன்பமூட்டுகின்றன… தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணரின் நடை எளிமை வாய்ந்தது. சேனாவரையரின் இலக்கணவுரையில் புனைந்து கூற மிகுந்த இடம் இல்லையாயினும் அவரது நடையில் மிகுந்த பொலிவும் புனைவும் இடம்பெறுகின்றன. திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர்…
உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல – அ. தாமோதரன்
உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல! பரிபாடலின் முதற்பாடல் இளம்பூரணார் உரையினாலும், பதிற்றுப்பத்துப் பாடல்கள் சில நச்சினார்கினியர் உரையினாலும், பழமொழியின் முதற்பாடல் மயிலைநாதர் உரையினாலும் கிடைத்துள்ளமை மேற்கோள் ஆட்சியின் பயன் அல்லவா? களவியலில் காணப்பட்ட பாடல்கள் பாண்டிக்கோவையைச் சார்ந்தவை என்பதும், சிற்றடக்கம் எனவும் சிற்றடக்கமெனவும் பிழைப்பட வழங்கப்பட்டுவந்த நூற்பெயர் சிற்றெட்டகம் என திருத்தமுற்றதும் களவியற் காரிகையின் மேற்கோள் ஆட்சியினால் அல்லவா? தரவு, கொச்சகம் முதலிய உறுப்புகளின் பாகுபாடு அறிய இயலாதவாறு சிதைந்த நிலையில் கிடைத்துள்ள பரிபாடலில் இரு பாடல்களுக்காவது, உறுப்பமைப்புக் கிடைத்தது…