இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்
மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…