உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்
உறக்கம் வருமோ? சொல்வீர்! எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…