(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…