உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி
பேரா. முனைவர். ப. பானுமதி மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அரங்கத்தலைமை வகித்ததோடு “பெரிய புராணத்தில் பேசப்படாத பெண் புராணங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். அரங்கத்தில் மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கற்பூர சுந்தர பாண்டியன், முனைவர். வாணி அறிவாளன், முனைவர். திலகவதி ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். அரங்கத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், கவிவேந்தர் க. வேழவேந்தர், பேரா. இரா.மோகன், பேரா. நிர்மலா மோகன், இரா.மதிவாணன், கலைமாமணி சோபனா இரமேசு, சிங்கப்பூர் பதிப்பாளரும் பொறியாளருமான…