உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா 12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள்…