பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. – இலக்குவனார் திருவள்ளுவன்
பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. மலேசியாவில் இவ்வாரம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற இருப்பதை அறிவீர்கள். இது குறித்து முன்னரே “போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் மன்றத் தலைவர் முனைவர் மு.பொன்னவைக்கோவிடமும் பிற பொறுப்பாளர்களிடமும் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம். “அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!” (அகரமுதல –…