திருவள்ளுவர் முதல் புரட்சியாளர் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் முதல் புரட்சியாளர் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார். புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூடநம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயலுவதே ஆகும். பழமையைப் புரட்டிவிட்டு அகற்றிவிட்டு புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி…