தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்
செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்
செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது…
நீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக நாதன்
இனியும் இனியும் நீதான்! வல்வையின் வடிவே! தமிழர் வாசலின் நிமிர்வே ஐயா! சொல்லிய திசையில் சுடரும் சூரிய தேவே! தழுவும் மெல்லிய காற்றே! பாசம் மேலிடும் ஊற்றே! உன்னை அள்ளியே அணைக்க ஆசை ஆவலோடு உள்ளோம் வாராய்! அற்றைத்திங்கள் நீதான்! அவ்வெண் நிலவும் நீதான், ஓற்றைக்காற்றும் நீதான், ஓண்டமிழ்க் குரலும் நீதான், கோற்றவைப் பிள்ளை நீதான், கொடியர சாள்வாய் நீதான், இற்றைவரைக்கும் நீதான், இனியும் இனியும் நீதான்! நேற்று நீ இருந்தாய் அழகாய் நிலவிலும் நீயே வடிவாய் ஏற்றுமே துதித்தோம்! உன்னில் எத்தனைக்…
தமிழரின் அடையாளத்தை உணர்த்திய பிரபாகரன் வாழ்க! – உலோக நாதன்
நீ பிறந்தாய் – தமிழரின் தனி அடையாளத்தை உலகம் தெரிந்து கொண்டது! நீ பிறந்தாய் – தமிழரின் தீரம் இதுவென்று கண்டு உலகமே அதிர்ந்து நின்றது! நீ பிறந்தாய் – சிங்களனின் திமிரெங்கோ தலைகவிழ்ந்து வீழ்ந்தது! நீ பிறந்தாய் – ஈழத் தேசம் ஒட்டுமொத்தத் தமிழரின் கனவுத் தேசம் ஆனது! இதோ.. கனவுத் தேசம் கைகூடும் நாளின்னும் வெகு தொலைவிலில்லை.. எங்களின் ஒற்றைத் தலைவனே.. கனவுத் தேசம் இனி எங்களின் – இலட்சியத் தேசமென முழங்குவோம்; இந்த இலட்சியத் தேசம் வெல்லும் நாளில் உன்…
மனத்தோடும் மணம் பேச வருவானே! – (உ)லோக நாதன்
மனத்தோடும் மணம் பேச வருவானே! மூவாறு வயது தொட்டு யாராரோ பெண் கேட்டார்கள் பெண்ணை மட்டுமல்ல…. பொன்னும் பொருளும் கூட ஊனமுள்ள பெண்ணென்று உயர்ந்து கொண்டே போகிறது வீடு வாசல் சொத்தென்றும் ஊர்திகூட வேண்டுமாம் கைக்கூலியாய்! அழகில் ஓர் குறையில்லை அறிவிலும் ஓர் குறையில்லை அன்பில் கூடக் குறையில்லை அப்புறம் என்ன குறையோ? ஊனம் கேட்டுப் பெற்ற வரமா? கடவுள் கொடுத்த சாபமா? பெற்றோரின் பாவமா?-அது துய்ப்போரின் பலனா? இயற்கை தந்த பரிசை இழித்துரைக்கும் இனமே இதயம் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்…..!!??…