சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு . பொருள்: உழவன் 1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான். 2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற  நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான். 3)  ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான். 4) வான் தருமழை போல் உலகிற்கு உணவு தருகிறான். 5) உலகிற்குச் சுவைதரு உணவுப்…