நம்மைக்காக்கவேனும் உழவர்களைக் காப்பாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நம்மைக்காக்கவேனும் உழவர்களைக் காப்பாற்றுங்கள்! உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (திருவள்ளுவர், திருக்குறள் 1036). இந்தியா முழுமையும் வேளாண்பெருமக்கள் தற்கொலை புரிவது என்பது தொடர்நிகழ்வாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் முதன்மைக் கருத்து செலுத்தி வேளாண் பெருமக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும். வேளாண் பெருமக்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்குவதும் மடிவதும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நிகழ்வதும் வழக்கமாக உள்ளன. காவிரியாற்றுச் சிக்கல், முல்லை-பெரியாற்றுச் சிக்கல் என அண்டை மாநிலங்களினால் உருவாகும் சிக்கல்களும் மத்திய அரசின் பாராமுகமும்…