பொங்கட்டும் பொங்கல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கட்டும் பொங்கல்! உழவர் திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள் வந்தது இன்று நொந்தது உள்ளம் உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம்! மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம்! தீரட்டும் துன்பம்! மலரட்டும் ஈழம்! பெருகட்டும் இன்பம்! வெல்லட்டும் தமிழியம்! பொங்கட்டும் பொங்கல்! தங்கட்டும் மகிழ்ச்சி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்