உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்

(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா? சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘சிந்தனைச் சுவடுகள்’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்)…

உ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்

(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி)   உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3   நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள்? இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா? ஆம்! அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க…

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் – அரிஅர வேலன்

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் 1992ஆம் ஆண்டு நாட்குறிப்பை புரட்டியபொழுது கிடைத்த தகவல் இது. ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கியங்களை அச்சுச்சுவடிகளாக வெளியிட்டவர் உ.வே.சா.தான் என்றும் முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான் என்றும் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர் மட்டும்தான் அம்முயற்சிக்கு மூலவரா என்னும் வினா 1992ஆம் ஆண்டில் எனக்குள் எழுந்திருக்கிறது, அதுபற்றி நூலகவியலாளர் வே.தில்லைநாயகத்திடம் கேட்டபொழுது, “இல்லை. உ..வே.சா. பிறப்பதற்கு முன்னரே தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. உ.வே.சா. அதிகமான நூல்களை அச்சிட்டார்” எனக் கூறிவிட்டுத், தனது நினைவிலிருந்து அவர் கூறிய பதிப்பாசிரியர்களின் பட்டியல்தான் இது: ஆறுமுகநாவலர் 02….

உரிய தமிழ் கற்பிப்போம் ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

தமிழ்படித்தால்  பூரித்தே  வாழ்ந்திடுவேன்! ஆங்கிலந்தான்  அறிவுமொழி  ஆங்கி  லத்தில் அருங்கல்வி  கற்றால்தான்  ஏற்றம்  என்றே தீங்கான  எண்ணத்தில்  தமிழர்  நாமோ திசைமாறிச்  செல்கின்றோம்  வழியை  விட்டே மாங்குயிலைத்  தன்குஞ்சாய்  வளர்க்கும்  காக்கை மடத்தனம்போல்   குழந்தைகளைப்  பயிற்று  கின்றோம் தாங்குகின்ற  வேர்தன்னை  மறந்து  மேலே தரைதெரியும்  மரந்தன்னை  புகழு  கின்றோம் ! ஆங்கிலத்தைப்  படித்தால்நீ  பெருமை  யோடே அரும்வாழ்வு  வாழ்ந்திடலாம்  பூலோ  கத்தில் பாங்கான  சமற்கிருதம்  படித்தால்  நீயும் பான்மையுடன்  வாழ்ந்திடலாம்  மேலோ  கத்தில் ஏங்குகின்ற  படியிந்த  இரண்டு  மின்றி ஏலாத  தமிழ்படிக்கப்  போவ  தாக…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2   ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ்…

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா? – அருட்செல்வன் திரு

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா?   தமிழ்த்தாத்தா உவேசா தமிழ்நூல்களைத் தேடி நெல்லைமாவட்டம் கரிவலம்வந்தநல்லூருக்கு வருகிறார். அந்தவூர், வரகுணராமபாண்டியன் என்ற மன்னரின் தலைநகர். அரிய பல தமிழ்நூல்கள், அவர்காலத்துக்குப் பின் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நூல்களைத்தேடி உவேசா வருகிறாரென கேள்விப்பட்டவுடன் அக்கோவிலில் பூசைசெய்த பிராமணர்கள் அவ்வளவு தமிழ்நூல்களையும் எரித்துச்சாம்பலாக்கிவிட்டனர். இச்செய்தியை உ.வே.சா. அவர்களே தனது “எனது சரித்திரம்”என்ற நூலில் குறிப்பிடுகிறார்.   மன்னர் வரகுணராமபாண்டியரின் தம்பி அதிவீரராமபாண்டியர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழில் பெரும்புலமை பெற்றவர். வெற்றிவேற்கை, குட்டித்திருவாசகம் எனச் சொல்லப்படும் திருக்கருவைப்…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்  1/2   பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம்.   அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன?…

பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’   ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…