(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி   ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,       உடைய(து) உடையரோ மற்று?         ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;         மற்றையார், உடையார் ஆகார்.   உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,       நில்லாது; நீங்கி விடும்.         ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;         பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.   ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…