ஊட்டல் விரும்புவரோ? இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்! அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும் ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும் அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா? அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்! கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு! என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால், என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம், நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்! நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது! மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா ! மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள்…