காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய [பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை] பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்   தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் அடிப்படையில் பிறந்த சொற்களாகவோதான் அமைகின்றன. செவ்வியல் காலச் சொற்களின் தொடர்ச்சியாகப்…