இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் இரங்கத்தக்க ஊர்கள்! – வைகை அனிசு
இறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள் குளிர்காய்வது வழக்கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை உண்மை. ஆனால் இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப்…
ஊர்விலக்கம் – வைகை அனிசு
ஊர்விலக்கம் தமிழகத்தில் சாதிவிலக்கம் அல்லது ஊர் விலக்கம் என்று சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இலைமறைகாயாக இருந்து வருகிறது. சாதிவிலக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லது ஒவ்வொரு சாதியிலும் அல்லது ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடைபெறுகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இன்றும் பல ஊர்களில் உள்ளனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் யாரும் பேசக்கூடாது வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாது தண்ணீர் வாங்கிக் குடிக்க கூடாது எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது எந்த விழாக்களிலும் பங்குபெறக்கூடாது…