‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!     மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய்! இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது! ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன் ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார் படத்தொகுப்பு: கா.கார்த்திக் படைப்பு: தமிழ்நாடு…

சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்

அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்   புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….