தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!
பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம். 1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும்…