தமிழீழ விளையாட்டு விழா-2014, முன்சன்
முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014 ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது. சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள். வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச்…
வவுனியா மன்னகுளத்தில் வள்ளுவர் முன்பள்ளி
புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்! புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று…
தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014
பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது; தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…