எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!
எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது! தங்கள் ஆசைகளை மக்கள் கருத்துகளாகவும் கட்சித் தொண்டர்கள் அல்லது பொறுப்பாளர்கள் கருத்துகளாகவும் கதைவிடும் இதழ்களில், செயலலிதா, எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்து, வாசனுக்குப் புத்தி புகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 அகவை முதியவரான எசு.ஆர்.பாலசுப்பிரமணிம்போல் பதவி ஆசை கொள்ளாமல் கட்சி நலன் கருதுபவர் என இதன் மூலம் வாசனுக்குப் பெருமைதான் சேர்ந்துள்ளது. காங்கிரசு அல்லது தமாகா வில் இருந்துகொண்டே அதிமுகவாக நடந்து கொண்ட எசு.ஆர்.பாலசுப்பிரமணியம் அக்கட்சியில் சேர்ந்ததே நல்லது. ஆனால், முதலில் அக்கட்சியில்…