வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.   வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே…