எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி – இலக்குவனார் திருவள்ளுவன்
எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி பாசக, தன் காவி ஆணவத்தைப் பல இடங்களிலும் விரித்து வருகிறது. தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழலைப் பயன்படுத்தித் தமிழக அரியணையில் ஏறவும் முயன்று வருகிறது. இவற்றிற்குத் தமிழக மக்களின் உடன்பாடு இல்லை என்பதை நம்பாமல் பொதுத்தேர்வு(நீட்டு தேர்வு)த் திணிப்பு, தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களைச் செயற்படுத்தல், நவோதயா பள்ளிகள் மூலமும் பிற வகைகளிலும் இந்தி, சமற்கிருதத்தைத் திணித்தல் எனத் தமிழ்நாட்டைச் சிதைத்து வருகிறது. இவையெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைக்கு ஊறுநேர்விக்கும் என அறிந்தும் தன்னை…