கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே! சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018…
ஐயோ தமிழுக்கு ஆபத்து! – சுப.வீரபாண்டியன்
ஐயோ தமிழுக்கு ஆபத்து! ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று. தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த…