எதற்கு எழுதுகிறேன்? – பாவலர் மா.வரதராசன்
எதற்கு எழுதுகிறேன்? கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும் கவிஞர்கள் பல்லோரில் ஒருவ னல்லேன் மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன் பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும் பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன் தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச் சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்! விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும் “விலைபோனால்” நானெதற்கிங் கெழுத வேண்டும்? எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை எனக்காக அடியாளாய் வைத்தி ருந்தால் பெருமைகளும் மாலைமரி யாதை யெல்லாம் பெற்றிடுதல் மிகவெளிதே..அதைநான் வேண்டேன் கருத்துள்ள கவிதைகளால் குமுகா…