நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்
நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை! …