அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்
அறிவுக் கதைகள் நூறு பதிப்புரை கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர். கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு…
செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்
செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்…