புத்தகக் கண்காட்சியில் என்னூல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:- பழந்தமிழ்(விலை உரூ 100.00) நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல். பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல். மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும்…