உ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்
(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள்? இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா? ஆம்! அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க…