தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙா) –தொடர்ச்சி)] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி தமிழ்ப்பகைவர் என்போர் தமிழ்த்துறையுடன் தொடர்பற்றவர்கள் எனக் கருதினால் அதுவும் தவறாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேராசிரியர் சேரும் முன்பு தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம்தான் தவழ்ந்தது. ஆங்கிலம் மூலம் தமிழை விளக்குவதில் பெருமை கண்டனர் தமிழ்த்துறையினர். ஆங்கிலத்தில் பேசுவதே தம் உயிர் மூச்சு எனக் கொண்டனர் அவர்கள். ஆனால் பேராசிரியர் அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகச் சென்ற பின்பு தமிழ்த்துறை மட்டுமல்ல கல்லூரியே தமிழ்மணத்தில் மணந்தது….
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார். மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11 தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை. பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…