எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 2/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 3/3 இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது. இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…
எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 1/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 2/3 கல்வித் துறையில் இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…
எப்படி வளரும் தமிழ்? 1/3 கவிஞர் முடியரசன்
எப்படி வளரும் தமிழ்? 1/3 உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங் கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங் கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் நமக்குக் களிப்பூட்டுவன வேயாகும். அப் பெருமக்கள் உரத்த குரல் கொடுக்கும் பொழு தெல்லாம் நம் உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது. ஆனால், முரண் பட்ட கொள்கைகள் பரவிய தமிழ்நாட்டில் அக் குரல், காற்றுடன்…