புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.
தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும். வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை நாள் ஆகிய முப்பெரும் விழாவில், தமிழ்த் திரையுலகில் வாழ்வின் பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்த அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…