எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்
எல்லாம் கொடுக்கும் தமிழ்! என்னயில்லை நம்தமிழில் ஏன்கையை ஏந்தவேண்டும் இன்னும் உணரா திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத தாழ்வுமனம் போக்கியுள்ளே ஆய்ந்துபார் எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எள்ளல் புரிகின்றாய் ஏகடியம் பேசுகின்றாய் உள்ள துணரா துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல் தாழ்த்துகிறாய் காண்கதொல் காப்பியத்தை எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எந்த மொழியிலுமே இல்லா இலக்கணமாம் நந்தமிழில் மட்டுமுள்ள நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டியிங்கே எல்லாம் கொடுக்கும் தமிழ் ! ஐந்தாய் …