உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி) என் சரித்திரம் 37. எனக்குக் கிடைத்த பரிசு பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் – தொடர்ச்சி) என் சரித்திரம் 36. எல்லாம் புதுமை நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன் சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீடசை செய்யவும் கூடும்” என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப்…