உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள்…