தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3   1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.   1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 இசைப்பாடல்   இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார். இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.  வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள், வீ. முத்துச்சாமியின் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்னும் ஆய்வேட்டிற்கு அளித்த பே ட்டியில்,  ‘இசைப்பாடல் யாக்கும் திறமும்…

சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்

சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   அழகிய தையலை யன்புடன் மணக்க செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில் மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன் மணத்தால் நமது பணத்தைப் பகுக்க எண்ணினோ மல்ல; எண்ணி னவளும் வேளி ரொருவனை விரும்பி மணப்பின் பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம். அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க அழகிய தங்கை யற்பக் கூலியை சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை மணந்தால் வருவது மானக் கேடென எழிலர சிக்குறு மின்ப வாழ்விற் சிறுதி…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள் காதலின் கையிற் கருவிய ராகி இன்ப வாடல்க ளன்பாய்த் தொடங்கினர். தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும் முத்த மளித்து முகமலர் கொண்டே இன்ப மெய்து மெழினெறி கண்டே எழிலர சிக்கோ ரின்ப முத்தம் ஆடலன் விரும்பி அன்பி னளித்தான். காதல் கைமிகக் கருத்தழிந் தவளும் நிரைவளை முன்கை விரைவி னீட்டி இளமுலை ஞெமுங்க வளைந்து புறஞ்சுற்றி “ நின்மார் படைதலின்இன்பமு மின்று ” நன்றே வாழ்க…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி   உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்                 வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய                 அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)      சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர்  இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி….

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…