(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…