தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா…
தொல்காப்பிய விளக்கம் – 10 : முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 10 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தை 6 , 2045/19 சனவரி 2014 இதழ்த் தொடர்ச்சி) ட,ர, எனும் இவை மொழிமுதல் எழுத்துக்களாக வருதல் இல்லை. ‘ன்’க்குப் பிறகு ‘ட’வும் ‘ள்’க்குப் பின்னர் ‘ர’வும் வருதல் இல்லை. ஆனால் ‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ எனும் இடத்திலும் ‘அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகும்’ எனும் இடத்திலும் விதிக்கு மாறாக வந்துள்ளன. இந்நூற்பாக்களில், ட, ர, என்பனவற்றின் இயல்பு விளக்கப்படுகின்றது. ஆதலின்…
தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)
தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது. தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது. 42. ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…
தொல்காப்பிய விளக்கம் – 8 (எழுத்ததிகாரம்)
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 36. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே. நெட்டெழுத்து இம்பரும் = நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம் = க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும். குற்றியலுகரம், மொழியிறுதியில் நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 311. அளவைகளும் எடைகளும் பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன. பயன்பாட்டின் போது பெயர்களின் ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…
தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா. ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும். காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று. 33. அன்புஇறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…
தொல்காப்பிய விளக்கம் – 6 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள. ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும். மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர். 22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி…
தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும். ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர். 14. உட்பெறு புள்ளி உருவாகும்மே….