(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)     ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…