தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 – ஒளிப்படங்கள்

  கணிணிப்  பயன்பாட்டிற்காகத் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு   தோற்றத்தில் உருவாக்கிவருவதை விரிவாக்கவும் அதற்கான தேவையை உணர்த்தவும்  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 நாள்களில் நடைபெற்ற தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வருமாறு. பட உதவி :  நூ த.உலோ. சு. & அகரம் படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்

  கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம் தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம்   சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது.   தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய…

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில்  தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…