ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று – நன்னாடன்
ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று! அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும் கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும் சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும் சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும் பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும் காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும் மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும் மந்திரிக்கு நாமே மகத்துவ மூலிகையாய்க் காட்சியளிப்போம் தேர்தல் சந்தை முடியும் வரை விலையுள்ள பொருளாய் நாளும் வலம் வருவோம் திருவிழாவிற்குப் பின்னே மழிக்கப்பட்ட தலையாய் மாறிவிடுவோம்….
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது? இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3 இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன் சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? …
அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுகரன்
அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் …..….. இனியொருநாள் நீ வந்தால் இதயநிறை பக்தி யினால் மனித குலம் முழுவதுமே மண்டியிடும் உன் முன்னால் தனி மனித மானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முனிவன் என நீநின்று முடிபான வழி சொன்னாய் ! மீண்டும் இங்கு நீ வந்தால் மீண்டு வரும் நல்வாழ்வு ; வேண்டுகின்ற நல மனைத்தும் வேகமுறப் பல்கி விடும் ; மூண்டு பெருகி நிற்கும் மூடப் பழக்க மெலாம் பூண்டோடு அழிந்து பின்னர் பூத்து வரும் நல்லுலகு…
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது. அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த…
நல்லெழுத்தை மாற்றுவதோ? – க.தமிழமல்லன்
எழுத்தைச் சிதைப்போர் எச்சிலுக்(கு)ஒப்பு தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர் உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால் கழுத்து முறிந்துவிடும் காண். குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும் அறிவில்லார் செய்கொடுமை ஆய். அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும் தடியாரைத் தாங்கிடுதல் தப்பு. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார் பழிப்பார் தமிழின் பகை. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம் முழுத்தமிழ் கொல்வாரை மொத்து கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை என்னிடம் திருத்துகிறாய் இங்கு.? இதுவரை போதும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5). தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார். ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…
எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா
கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த பலாவும்முற்றப் பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க் கேட்கிறேன் பழச்சுவை ஒன்றாமோ ? இல்லை கொழுத்தும் கதிரவனும் குளுமைதரும் நிலவும் கோள்கள்தானே இழுத்து மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும் ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள் வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில் கருவறையில் தொழுது வணங்கத் தொகுத்த மொழியும் நல்ல முழுத்தத்தில் முடித்த மணமும்…
ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்
ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர் ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’…
தமிழ் எழுத்துகளைக் கண்டு ஆரியர் தம் எழுத்துகளை முறைப்படுத்தினர்
இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ்செல்வ வளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பல திறப்பட்ட ‘இலௌகிக’ கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்று வந்தார் என்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே,…
‘எழுத்து ‘ அமைப்பின் அறிமுக விழா
சென்னை ஐப்பசி 17, 2045 / நவ.3, 2014