உ .வே.சா.வின் என் சரித்திரம் 43 : காரிகைப் பாடம் தொடர்ச்சி
(உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம் தொடர்ச்சி) அத்தியாயம் 24 தொடர்ச்சிகாரிகைப் பாடம் தொடர்ச்சி கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள் .அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் இரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை இரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச்…
உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம்
என் சரித்திரம் 41 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி அத்தியாயம் 24காரிகைப் பாடம் குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய இராமையங்கார் எனது நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒருநாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடஞ் சொல்வாரே” என்றார். “விருத்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார் கேட்டார். “அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ் வித்துவான், இலக்கண, இலக்கியங்களை நன்றாகப் பாடஞ்சொல்லும் சக்தி வாய்ந்தவர்.” “அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு…
என் சரித்திரம் 41 : தந்தையார் சிவ பூசை
(என் சரித்திரம் 40 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி) தந்தையார் சிவ பூசை அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் படிக லிங்க பூசையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சிசுந்தரேசுவர ரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூசையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூசையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிசேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூசை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூசையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார்….
என் சரித்திரம் 40 : ஏக்கமும் நம்பிக்கையும்
(என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி) அத்தியாயம் 23ஏக்கமும் நம்பிக்கையும் களத்தூரில் இருந்தபோது எங்களுக்கு வந்த தானியங்களில் கம்பு முதலியன அதிகமாகவும் நெல் குறைவாகவும் இருந்தன. கம்பு முதலியவற்றைக் கொடுத்துவிட்டு நெல்லாக மாற்றிக்கொள்வது வழக்கம். அன்னையார் கம்பஞ் சாதம் உண்டது ஒருநாள் என் தாயார் உண்ணும்போது நான் கவனித்தேன். அவர் இலையில் இருந்த உணவு புதியதாகத் தோற்றியது; அவர் கம்பஞ்சாதத்தை உண்டுகொண்டிருந்தார். நெல்லின் அருமையை உணர்ந்த அவர் எனக்கும் என் தந்தையாருக்கும் நெல்லரிசியுணவை அளித்துத் தாம் மட்டும் கம்பஞ்சாதத்தைச் சில நாட்களாக உண்டு…