கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 11. ஏடு பெற்ற காதை பொழிலில் பூங்கொடி தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க் தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள் பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி, மூதாட்டி வருகை மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி நரை மூதாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள், அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ…