பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்
ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…
உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!
தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு! ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்! தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்…
“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் – ச.பா.நிர்மானுசன்
“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் கடற்கரையோரம் ஒதுங்கிய பாலகனின் உடலைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது. காவுகொண்ட கடலே காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும் இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று .குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின் வலியையும் வேதனையையும் எங்களால் ஆழமாகவே உணரமுடியும். இறைவன் வரம் கொடுத்தாலும் இதயங்கள் தாங்காது அந்த வலிலையை. அப்பனுக்கு ஆறுதல் சொல்ல யாருளரோ நாமறியோம் – ஆயினும் வல்லமை கொடுவென்று மன்றாடுவோம். சின்னக் குழந்தையின் வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி நினைவில் வரும் போது தந்தை எப்படி வாடிப் போவார்…