இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 16 : வீர விருதுகள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல் -தொடர்ச்சி) தமிழர் வீரம் வீர விருதுகள் வீரம் – மனத்திண்மை போர்க்களத்தில் வெற்றி பெறுதற்குப் புயத்திண்மை மட்டும் போதாது; மனத்திண்மையும் வேண்டும். “வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” என்பது வள்ளுவர் வாய்மொழி. மனத்திட்பமற்றவர் கோழைகள்; பேடிகள். ‘புலியடிக்கு முன்னே பேடியைக் கிலியடிக்கும்‘ என்பது இந் நாட்டுப் பழமொழி. ஏனாதிப் பட்டம்மனத்திட்பமுடைய படைத் தலைவரைத் தமிழ் மன்னர் சிறப்பித்தனர்; ஏனாதிப் பட்டமளித்துப் பாராட்டினர். அப் பட்டத்தின் சின்னம் ஓர் அழகிய மோதிரம். அதனை அரசன்…