சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்
சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487) சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது. அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக்…
பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவல் – ஈழத்து நிலவன்
பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு. பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு. சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை…
ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்
ஏறுதழுவல் அன்றும் இன்றும் பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது. கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…