(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி) பிரிந்தவர் கூடி. . . தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள்…