கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும்  கடந்த ஆனி 10, 2047 / சூன் 24,2016 அன்று சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் தொடரிநிலையத்தில் பொறியாளர் ச.சுவாதி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும்  கொலைசெய்தவரை விரைவில் கைதுசெய்துள்ள காவல்துறைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.    பொறி.சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரே வாயில் / தாடையில் / கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னாலிருந்து அரிவாளால் வெட்ட முற்படும்பொழுது கழுத்தில்படாமல் வாயில் அறுத்திருக்கலாம் என முதலில் பலரும் கருதினர். ஆனால்  கொலைக்குற்றவாளி எனக்  குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இராம்குமார்,…